நினைவலை
Article from Manalur Nataraj – Mechos
வணக்கம் ,
நம் கல்லூரி நினைவுகளை இங்கே எழுத்துவதில் என்னக்கு மகிழ்ச்சி
நினைவலை 1: வாலெண்டின் டே
பிப்ரவரி 14 ..ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி..இதை பார்த்த உடனே . ஏன் இருக்காது ..இருக்கும் ..இந்த ஒரு தேதி எ வச்சிக்கிட்டு நாம போட்ட ஆட்டம் சும்மாவா…ஐயோ ஐயோ..என்னை மாதிரி ஒரு சாதாரண டவுன் இருந்து வந்த பசங்களுக்கு எல்லாம் இது ஒரு பெரிய மேட்டர் ..அன்னைக்கு என்ன கலர் சட்டை போடணும் இன்னு ஒரு பெரிய டிஸ்கஷன் ஓடும் ஹாஸ்டல்ல ..ஒருத்தவனா கேட்டா “மச்சி ப்ளூ தான் ட பெஸ்ட்..ரெடி பார் லவ்”..அடுத்தவன் “யாரு சொன்ன வைட் தான் மச்சி போடணும் “..இன்னொருத்தன் “ரெட் மட்டும் தான் “….எப்படி அவன் அவன் சொல்றது கேட்டு மண்டை குழம்பி போய்..நாம சட்டை போடணுமா இல்ல வேண்டாமா இங்குறதே ஒரு டவுட் வந்துரும்.
நூதனம் (மேல சன்னதியில் இருக்கும் ஒரு கடை|கடையில் சும்மா அலை மோதும்..வாலெண்டின் டே கார்டு வாங்க..இன்னும் சில பேருக்கு..என்ன லெட்டரிங் போட்டு இருக்கு..அதுக்கு என்ன மீனிங் கூட தெரியாம அடுத்தவன் என்ன வாங்குறன்னு பாத்து..அதே கார்டு வாங்க வேண்டியது..கண்ணா கார்டு வாங்குறது பெருசு இல்ல அதை கொடுக்க வேண்டியவங்க கிட்ட டைம் பாத்து கொடுக்கணும் ..என்னக்கு தெரிஞ்சி எத்தினி கார்டு (ரெட் ரோசோட ) ஹாஸ்டல் ஷெல்ப் இருக்கும் தெரியுமா..புக்ஸ் பின்னாடி வச்சி இருப்பாங்க பசங்க..செமஸ்டர் முடியும் பொது ரூம் காலி பண்ணும் பொது மாட்டும்..
“டேய் பிரேம் இங்க பாருடா நாம சேது பண்ண வேலைய ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ..ஹீஹீஹ் )..வாலெண்டின் டே கார்டு ரா..மச்சி..யாருக்கு னு பாரு….ஒத் ஓஹ் நந்தினிக்கா ..ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் ..”
1992-96 எல்லாம் ஒரு பொண்ணு கிட்ட பேசுறதே பெருசு அதுல வாலெண்டின் டே கார்டு கொடுக்கறது..எவ்ளோவ் பெரிய மேட்டரு …நாம அடிக்கடி கேக்குற விஷயம் (1).”கொடுக்க சரியான சான்ஸ் கிடைக்கல ..”.. (2) போய் கொடுத்தேன் டா ..ஆனா அவ வாங்கிக்கவே இல்லடா (அவ friend பக்கத்துல யாரும் இல்லையா?ட்ரை பண்ணி இருக்கலாம் மச்சி). (3)கொடுக்க போகும் போது நம்ம ப்ரோபஸ்ஸோர் பாத்துட்டார் ..இந்த வாட்டி இன்டெர்னல்ஸ் காலி மச்சி….இன்னும் எத்தனையோ …
அன்னைக்கு பாத்தா “milky Mist “, “saradharam “. akshaya “, PC கோயில் “..இன்னு எங்க பாத்தாலும் ஒரே pair தான் …ஹ்ம்ம் நமக்கு எல்லாம் கொடுத்து வைக்கல மச்சி….ச ரி விடுங்க ….அதே சமயம் அன்னைக்கு நைட் ‘MS wines ” fulla இருக்கும்..ஒருத்தவன் ஓகே ஆனதுக்கு குடிப்பான் ,இன்னொருத்தன் ஓகே ஆகல இன்னு குடிப்பான் ..ஆக மொத்தம் சரக்கு போடுறோம் ..அதான் மேட்டரு