சுந்தரகாண்டம் !
Contributor: Mrs. Vidhya Sridharan from EEE
பதினெட்டு வயதுவரை கைபிடித்து கற்றுத்தந்து,
Sep 2nd அன்று வாழ்ந்து பார் மகளே என் மகளே!
என்று பெற்றோர் கொடுத்த sample soap தான் engineering வாழ்க்கை.
எல்லா sample போல இந்த soapபும் மணம் கமழ்ந்தது
ஆணால் நிசத்திலோ நுரைக்கவே இல்லை.
வேடிக்கையான வகுப்புகள்!
நாங்கள் துப்பாக்கி சுமந்தோம் ஆனால் தீவிரவாதிகள் அல்ல.
நரி குறவர் காக்கா சுடுது, குருவி சுடுது
நாங்கள் plan சுடுது, pentagon சுடுது.
Steam labல் ஆவி பிடித்து, circuit labல் resistance ஏற்றி
Machines labல் மின்சாரம் உற்பத்தி செய்த
நாங்கள் எல்லோருமே Michael Faraday தான்.
Microprocessor labல் படித்தது memoryயிலேயே இல்லை.
விடுதியோ வேடந்தாங்கலோ?
முகமறியா ஒருவருடன் ஒரறையில் வாழவைத்த முன்னனுபவம்
கோழிபிடித்து, bulb மாட்டி ஆரம்பித்த விடுதி வாழ்க்கை
பிண் இரக்கைகட்டி பறந்தது அண்ணாமலை சைக்கிளாய்.
எம் hostelலிலும் ஆஞ்சநேயர் ஆட்டம் அநேகம் உண்டு.
ஓட்டை TVயில் பார்த்த ஒலியும் ஒளியும் காட்சி
இன்றும் கன்னை விட்டு மறையவே இல்லை.
மச்சி நண்பேண்டா!
ரெட்டை குளத்திலே பூத்த பூ எங்கள் நட்பு.
ஓரே cupபிலே காபி குடித்து, ஓரே தட்டிலே சோறுண்டு
விடிய விடிய வேதாந்தம் பேசி, வேண்டாவெறுப்பாய் record முடித்தோமே.
உச்சி வலிக்க முட்டை அடித்த பிறந்தநாட்களும்
Stone benchலே boyசை கிண்டல் செய்த கிசுகிசுகளும்
Lena matinee showவில் பார்த்த உள்ளத்தை அள்ளிதா படமும்
வெட்டியாகவே சுற்றி வந்த நடராஜர் கோவிலும்
கெள்ளிடத்திலே குளித்து, messல் சாப்பிட்ட மீண் குழம்பும்
நிணைக்கையிலே உருகாத நெஞ்சமொன்று இல்லை.
எங்க கெத்து
இல்லை இல்லை என்று சொல்ல இன்சினியர் தேவை இல்லை
ஆம்,
எங்கள் நட்பின் சூடு நெஞ்சில் உண்டு
ஞானத்தின் தேடல் நினைவில் உண்டு
சமூக அக்கறையுள்ள சகாயங்கள் உண்டு
நாட்டின் வளர்ச்சியில் தனித்தொறு பங்கு உண்டு.
நினைத்தாலே இணிக்கும்
சீதையின் சுந்தரகாண்டம் அசோக வணத்திலே
எங்களின் சுந்தரகாண்டமோ அண்ணாமலையிலே
புராண சுந்தரகாண்டத்தை படித்தால் தான் இனிக்கும்
எங்களின்u சுந்தரகாண்டத்தை நினைத்தாலே இனிக்கும்
ஆம் தோழா! நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கும் !